ச்சே… இவளெல்லாம் ஒரு தாயா..?! இன்ஸ்டாகிராம் காதலனுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற அரக்கி.. கணவனின் ஒரே ஒரு சந்தேகத்தால் அம்பலமான பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

ச்சே… இவளெல்லாம் ஒரு தாயா..?! இன்ஸ்டாகிராம் காதலனுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற அரக்கி.. கணவனின் ஒரே ஒரு சந்தேகத்தால் அம்பலமான பகீர் உண்மை..!!

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்கரூர் மாவட்டத்தில், தாயொருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் இனிப்பில் களைக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துக் கொன்று, அதை உணவு நச்சாதல் என நாடகமாட முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று, ஆறு வயதான ஜஸ்னூர் கவுர், ஐந்து வயதான அர்மன்தீப் சிங் மற்றும் இரண்டரை வயதான ரெஹன்தீப் சிங் ஆகிய மூன்று குழந்தைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரான குழந்தைகளின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது சந்தையிலிருந்து வாங்கி வரப்பட்ட இனிப்புகளைச் சாப்பிட்ட பிறகே குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட கடையில் இருந்து இனிப்புகளை வாங்கிச் சாப்பிட்ட மற்ற எவருக்கும் எந்தவித உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை என்பது காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இனிப்பில் களைக்கொல்லி விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

சங்கரூர் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் ரவ்ஜோத் கவுர் கிரேவால் இதுகுறித்து தெரிவிக்கையில், குழந்தைகளின் தாயான லவ்பிரீத் கவுருக்கும், ஹர்ஜித் சிங் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்துதான் குழந்தைகளைத் தீர்த்துக்கட்ட இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தாய் லவ்பிரீத் கவுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்; தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் ஹர்ஜித் சிங்கைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் சேகரிக்கப்பட்ட சான்றுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in