“என்னை விட்டுட்டு நீ தப்பிச்சுப் போயிருடா..!” எரியும் பேருந்துக்குள் தாயின் கடைசி வார்த்தை; பொறியாளரான மகன் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை விட்டுட்டு நீ தப்பிச்சுப் போயிருடா..!” எரியும் பேருந்துக்குள் தாயின் கடைசி வார்த்தை; பொறியாளரான மகன் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் நேரிட்ட கொடூரமான ஸ்லீப்பர் பேருந்து தீ விபத்தில் சிக்கி, தனது தாயைக் காப்பாற்ற முயன்ற குரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பொறியாளர் சஷாங்க் குப்தா மற்றும் அவரது தாய் சுனிதா குப்தா உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்துக்குள் கடுமையான புகையும் நெருப்பும் பரவியபோது, தாய் சுனிதா தனது மகனிடம் ஜன்னல் அல்லது அவசரக் கதவை உடைத்துக்கொண்டு தப்பித்து உயிரைக் காத்துக்கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால், எரியும் பேருந்துக்குள் தாயைத் தனியாக விட்டுச் செல்ல மறுத்த சஷாங்க், அவருடனேயே இருக்க முடிவு செய்ததால், நச்சுப் புகையும் தீயும் சூழ்ந்து இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியான சஷாங்க், சுனிதா, ஸ்ருதி ராவத், சரோஜ் குப்தா, மயங்க் குப்தா, தேவேந்திர சஹாய் பரத்வாஜ், ஹர் சரண் குப்தா, உஷா தேவி மற்றும் ஓம்பிரகாஷ் ஆகிய 9 பேரின் சடலங்களையும் போலீசார் முழுமையாக அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, ‘ராஜ் கல்பனா டிராவல்ஸ்’ பேருந்து நிறுவனத்தின் மேலாளர் விகாஸ் மற்றும் ஓட்டுநர்கள் உட்படப் பலரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பேருந்தின் ஏசி எஞ்சின் கோளாறு மற்றும் அவசரக் கதவு செயல்படாதது ஏன் என்பது குறித்தும், பயணிகள் புகார் அளித்தும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாதது குறித்தும் தொழில்நுட்பக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “எங்கள் உறவினர்களின் உயிரே போன பிறகு இந்த நிவாரணத் தொகை எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in