LATEST NEWS
“அடேங்கப்பா… பேரப்பிள்ளைகளுக்காக வீட்டின் பின்புறத்துல ரூ.20 லட்சத்துல ரோலர் கோஸ்டரே கட்டிய தாத்தா..” கடைசியில இப்படி ஒரு செக் வைப்பாங்கனு எதிர்பார்க்கல..!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மவுண்ட் பிளசண்ட் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் சோர்பா. 60 வயதான இவர், தனது பேரக்குழந்தைகள் வீட்டிலேயே மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்பதற்காகத் தனது வீட்டின் பின்புற நிலத்தில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை அமைத்துள்ளார். ஏற்கனவே இவரது வீட்டில் கோ-கார்ட் தடம், 105 அடி நீளமுள்ள வாட்டர் ஸ்லைடு மற்றும் 1957-ஆம் ஆண்டின் பழமையான கேரவுசல் ராட்டினம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 28,000 டாலர் (சுமார் ரூ.23 லட்சம்) செலவில் கேரவுசல் ராட்டினத்தை வாங்கி, அதற்கு வண்ணம் தீட்டி, புதிய மின் இணைப்புகளை வழங்கி தத்ரூபமாகப் புதுப்பித்துள்ளார்.
தற்போது இதன் தொடர்ச்சியாக, ‘தி டைடல் வேவ்’ என்ற சிறிய ரக ரோலர் கோஸ்டர் ராட்டினத்தை வாங்கித் தனது வீட்டின் பின்புறத்தில் அமைத்துள்ளார். இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்குச் சுமார் 24,700 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 லட்சம்) செலவிட்டுள்ளார். குழந்தைகள் நாள் முழுவதும் செல்போன், கணினி என டிஜிட்டல் திரைகளிலேயே நேரத்தைக் கழிப்பதைத் தடுத்து, அவர்களுக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தான் இதை அமைத்ததாக சோர்பா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த ரோலர் கோஸ்டர் ராட்டினம் உள்ளாட்சி மண்டல விதிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி அதிகாரிகளுடன் சட்டப் போராட்டம் உருவாகியுள்ளது. இந்த பகுதியில் ரோலர் கோஸ்டர் போன்ற பொழுதுபோக்கு அமைப்புகளை அமைக்கத் தெளிவான சட்ட அனுமதிகள் இல்லை என்பதால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றாமல், முற்றிலும் தனது பேரக்குழந்தைகளின் தனிப்பட்ட விளையாட்டுக்காகவே இதை உருவாக்கியுள்ளதாகக் கூறும் சோர்பா, இந்த நிராகரிப்பை எதிர்த்து கவுண்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
