“என் தாயின் மீது ஆணையாக” அன்று மேடையில் நடந்தது இதுதான்… உண்மையை உடைத்த அமைச்சர் ராஜ்மோகன்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் தாயின் மீது ஆணையாக” அன்று மேடையில் நடந்தது இதுதான்… உண்மையை உடைத்த அமைச்சர் ராஜ்மோகன்..!!!

Published

on

தாராபுரம் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுத விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், மேடையில் சத்தியபாமாவின் காதோரம் தான் பேசியது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து தற்பொழுது நெகிழ்ச்சியுடனும் ஆவேசத்துடனும் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் தன் விளக்கத்தில், “தாராபுரம் கூட்டத்தில் ‘முதலமைச்சர் ரொம்ப நேரமாக மேடையில் நின்றுகொண்டிருக்கிறார்; மக்களும் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள். எனவே, சீக்கிரம் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்’ என்று ஏற்பாட்டாளர்கள் போன் மூலம் தன்னிடம் கூறிய தகவலையே சத்தியபாமாவிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ‘என் தாயின் மீது ஆணையாக மேடையில் நடந்தது இதுதான்’ என்று கூறியுள்ள அவர், ஒரு பெண்ணின் கண்ணீரைத் தங்களது அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் தவறாகச் சித்திரிக்க வேண்டாம் என்றும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in