LATEST NEWS
“தவெகவினர் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்குறாங்க” சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தொகுதி மக்கள் தங்களை அணுகி, “தவெகவினர் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள்” எனப் பேரம் பேசுவதாகவும், கள நிலவரத்தை வாக்காளர்களே தன்னிடம் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் இருந்தே ‘தூய சக்தி… வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம்’ என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள சண்முகம், களத்தில் இதற்கு மாறாக தவெக அதிகளவில் பண விநியோகம் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயகத்தை சீர்குலைக்கும் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தவெக கட்சித் தலைவர்கள் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
