LATEST NEWS
#BREAKING: 5 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில்.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரித் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளின் முந்தைய தேர்தல் வெற்றிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தச் சூழலில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒரே தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் உருவாகும் சட்டச் சிக்கல் ஏற்படும் எனக் கூறி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னதாக இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தது.
