CRIME
“இது என்ன கொடுமை..” நடுரோட்டில் கேட்ட வார்த்தையால் கொடூரமாக சண்டை போட்ட ஓட்டுனர்கள்.. சமாதானம் செய்யப்போன பெண்ணுக்கு நேர்ந்த ‘அந்த’ கொடூரம்.. பகீர் சிசிடிவி காட்சி..!!
நெடுஞ்சாலைகளில் நடக்கும் மிகச்சிறிய வாக்குவாதங்களுக்காகக் கூட, மனிதர்கள் எந்த எல்லைக்கும் சென்று வன்முறையைக் கையில் எடுக்கத் துணியும் அவல நிலை அரியானாவை அடுத்த அலிகாரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாலையில் கார் ஓட்டுநருக்கும் இருசக்கர வாகன ஓட்டியான ஒரு நபருக்கும் இடையே திடீரென ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார் ஓட்டுநர் அந்த நபரைத் தொடர்ந்து மிகக் கொடூரமான வார்த்தைகளால் கெட்ட வார்த்தை பேசித் திட்டியுள்ளார். நிலைமை மோசமாவதைத் தடுக்கவும், இருவரையும் சமாதானப்படுத்தவும் அங்கிருந்த ஒரு பெண் நடுவில் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் அந்தப் பெண்ணின் மீது பாய்ந்து, அவரது கன்னத்தில் சரமாரியாக அறைந்தும், நெஞ்சில் குத்தியும் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலால் அந்தப் பெண் நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இங்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவம் நடக்கும் போது அந்தச் சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரு பெண் நடுரோட்டில் தாக்கப்படும் போது அந்த வன்முறைக்காரனைத் தடுத்து நிறுத்த ஒருவர்கூட முன்வரவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வந்த அவரது உறவினரையே “பிரச்சினையை வளர்க்காமல் இடத்தை விட்டு உடனே கிளம்புங்கள்” என்று அங்கிருந்த கூட்டம் வற்புறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்துப் பக்கம்பக்கமாகப் பேசும் நாம், நிஜ வாழ்க்கையில் சாலையில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து நேரிடும் போது எவ்வளவு சுயநலமாக மாறிவிடுகிறோம் என்பதையே அலிகாரில் நடந்த இந்தச் சம்பவம் காட்டுகிறது. இதுவே நமது தற்போதைய சமூகத்தின் கசப்பான யதார்த்த உண்மை என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
