LATEST NEWS
உங்கள மாதிரி நாங்க பயந்தாங்கோலிகள்னு நினைச்சீங்களா..? தோத்தாலும் , ஜெயிச்சாலும் கெத்தா… தவெகவினருக்கு மாஸ் காட்டிய ஸ்டாலின்..!!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யை நோக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். “கரூரில் 41 பேர் இறந்துபோன சம்பவத்தில் விஜய்க்குத் தலைமைப் பண்பே இல்லை என்று உயர் நீதிமன்றமே நேரடியாகத் திட்டியுள்ளது. உங்களைப் போன்றவர்கள் திமுகவினரைப் பயந்தாங்கோலிகள் என்று நினைத்துவிட்டீர்களா?” என அவர் மேடையில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக என்பது தேர்தல் வெற்றிகளை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும், எத்தனையோ சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து வந்த பேரியக்கம் என்றும் சுட்டிக்காட்டினார். “தேர்தலில் நாங்கள் தோத்தாலும் ஜெயிச்சாலும் கெத்தா திமுக கரை வேஷ்டியைக் கட்டிக்கிட்டு, மக்களுக்காகப் பாடுபடுவோம்; எப்போதும் மக்கள் மத்தியிலேயே களம் காண்போம்” எனத் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் அண்மையில் படப்பிடிப்பு பாணியில் வந்து தேநீர் குடித்துவிட்டு, 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டுப் ‘பந்தா’ செய்துவிட்டுப் போய்விட்டதாக விமர்சித்த ஸ்டாலின், மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நிற்பது திமுக மட்டுமே என்று கூறினார். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பிற்கும் இடையேயான இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
