“யார்கிட்ட போன் பேசிட்டு இருக்க.. ?” ஆத்திரமடைந்த தாய் மற்றும் மாமா நடுராத்திரியில் செய்த கொடூர காரியம்.. 22 இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“யார்கிட்ட போன் பேசிட்டு இருக்க.. ?” ஆத்திரமடைந்த தாய் மற்றும் மாமா நடுராத்திரியில் செய்த கொடூர காரியம்.. 22 இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில், கைபேசியில் ஒருவருடன் பேசியதற்காக 22 வயது இளம்பெண் ஒருவரை அவரது சொந்தத் தாயும் மாமாவும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முஸ்கான் உய்கே என்ற அந்த இளம்பெண், மொபைல் போனில் யாருடனோ தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் சுனிதா உய்கே மற்றும் மாமா அனில் துர்வே ஆகியோர், அந்தப் பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தகராறு முற்றிய நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து முஸ்கானை முதலில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், கோபத்தின் உச்சியில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். குற்றத்தை மறைப்பதற்காக, உயிரிழந்த முஸ்கானின் உடலை அருகில் இருந்த ஒரு வயல்வெளியில் வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்தத் துயரமான சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிவ்னி மாவட்டக் காவல்துறை, கொலையாளிகளான தாய் மற்றும் மாமாவை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in