அடக்கடவுளே.. பாலத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட எஞ்சின்.. காரோடு கருகிய 4 நண்பர்கள்.. கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே.. பாலத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட எஞ்சின்.. காரோடு கருகிய 4 நண்பர்கள்.. கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது பயங்கரம்..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சான்வரியா சேத் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய ஐந்து நண்பர்களின் கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்ததில், நான்கு இளைஞர்கள் காரின் உள்ளேயே உடல் கருகி கொடூரமாக உயிரிழந்தனர். நேற்று இரவு 11:30 மணியளவில் சதல்பூர் மற்றும் கெரோட் இடையே உள்ள லேபாட்-நயாகான் நான்கு வழிச்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பாலத்தின் டிவைடரில் மோதிய வேகத்தில் காரின் எஞ்சின் தனியாகக் கழன்று வெளியே விழுந்ததுடன், கார் பாலத்திற்கு அடியில் தலைக்குப்புற விழுந்து உடனடியாகத் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தின் போது ஒரு இளைஞர் மட்டும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், காரின் உள்ளே சிக்கிக்கொண்ட அங்குஷ், சேத்தன் சவுத்ரி, ஆதித்யா மற்றும் அபிஷேக் சோலங்கி ஆகிய நான்கு பேர் உயிருடன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த துஷார் மாண்ட்லோய் என்ற மற்றொரு இளைஞர் மீட்கப்பட்டு இந்தூர் மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சதல்பூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காரில் எரிந்த தீயை அணைத்து, உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in