“கடவுளின் பணி..” குட்டியைத் தனியாக விட்டுச் சென்ற தாய் யானை… வனத்துறையினர் செய்த அந்த ஒரு விஷயம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கடவுளின் பணி..” குட்டியைத் தனியாக விட்டுச் சென்ற தாய் யானை… வனத்துறையினர் செய்த அந்த ஒரு விஷயம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

Published

on

மேற்கு வங்காளம், கர்சியோங் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் யானையும் அதன் குட்டியும் வனத்துறையினரால் மீட்கப்பட்டன. ஆனால் மீட்புப் பணியின் போது, அந்த யானைக் குட்டி தனது தாயிடமிருந்து பிரிந்து தனியாக மாட்டிக் கொண்டது. குட்டியை அதன் தாயுடன் மீண்டும் இணைக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த கர்சியோங் வனத்துறை அதிகாரிகள், தாய் யானையைக் கண்டறியும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

வனத்துறையினர் சுமார் ஏழு மணி நேரம் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, தாய் யானையைக் கண்டுபிடித்து குட்டியுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெளியிட்ட வீடியோவில், மீட்கப்பட்ட குட்டி யானை வனப்பகுதியை நோக்கி மெல்ல செல்வதும், சிறிது நேரத்தில் அடர்ந்த பசுமைக்குள் இருந்து தாயானை தன் மந்தையுடன் திரும்பி வந்து தனது குட்டியுடன் இணைவதும் பதிவாகியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணம் வன விலங்கு மீட்பு நடவடிக்கைகளில் தாயிடமிருந்து பிரியும் குட்டிகளை சேர்ப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

Advertisement

இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் காஸ்வான் இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தாய் யானையையும் குட்டியையும் மீண்டும் ஒன்றிணைக்க அயராது உழைத்த வனத்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இந்த மீட்புப் பணியை “கடவுளின் பணி” என்று வர்ணித்துள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ பலரின் இதயங்களைக் கவர்ந்துள்ளதுடன், வனத்துறையினரின் சீரிய முயற்சியையும் வெகுவாகப் பாராட்டி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in