“இது காரா இல்ல ஆட்டுக்குட்டிய அடைக்கிற வண்டியா..?” பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பள்ளி நிர்வாகம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!1 – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது காரா இல்ல ஆட்டுக்குட்டிய அடைக்கிற வண்டியா..?” பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பள்ளி நிர்வாகம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!1

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் பகுதியில், பள்ளிச் சிறுவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு தனியார் பொலிரோ காரில் வைக்கோலைப் போல அடைத்து ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லும் அவல நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளிக்குச் சென்று வர முறையான பள்ளி வாகனங்களையோ அல்லது வணிக ரீதியான டாக்ஸி அனுமதி பெற்ற வாகனங்களையோ பயன்படுத்துவதற்குப் பதிலாக, எவ்விதப் பாதுகாப்பு விதிகளும் இல்லாத ஒரு சாதாரணத் தனியார் காரை பள்ளி நிர்வாகமும் சில பெற்றோர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தனியார் காரின் உட்புறத்தில் கொள்ளளவிற்கு அதிகமாக, குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் அமர வைக்கப்பட்டு மிகக் கொடுமையான முறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விபத்துகள் நேர்ந்தால் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய அஜாக்கிரதையான செயல்பாடு, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிச் சிறுவர்களின் உயிரோடு விளையாடும் இந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது போக்குவரத்துத் துறையினரும் காவல் துறையினரும் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in