CRIME
“ஊரே சொல்லியும் நம்பல, ஆனா…” நடுச்சந்தையில் வளைத்துப் பிடித்த கணவன்.. அடுத்த நொடியே கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியத்தை பாருங்க.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
தனது மனைவி தினசரி வேறொரு ஒப்பந்ததாரருடன் வெளியில் சுற்றித் திரிந்ததை நீண்ட நாட்களாகப் பொறுத்துக் கொண்ட கணவன், இறுதியில் நடுச்சந்தையில் வைத்து அவரிடம் நியாயம் கேட்டபோது, அந்த மனைவி கணவனை உதறிவிட்டு காதலனுடனேயே ஓட்டம் பிடித்த நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மனைவி தடம் மாறுவதை அறிந்திருந்தும், எங்கே தட்டி கேட்டால் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்றுவிடுவாளோ என்ற அச்சத்தில் அந்தப் கணவன் இத்தனை நாட்களாக மௌனம் காத்து வந்துள்ளார். ஆனால், ஊர் மக்கள் அனைவரும் தன் மனைவியின் தவறான நடத்தையைப் பற்றித் தன்னிடம் பேசத் தொடங்கியதால் அவமானம் தாங்க முடியாமல், இன்று நடுச்சந்தையில் வைத்து தனது மனைவியைப் பிடித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அந்தப் பெண்ணோ தன் கணவனின் குமுறலை துளியும் மதிக்காமல், மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஒப்பந்ததாரருடன் வண்டியில் ஏறிச் சென்றுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அந்த வாலிபர், கண்ணீருடன் தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப் பின் தொடர்ந்தும், அந்தப் பெண் அவரை அசிங்கப்படுத்தித் துரத்தி அடித்துள்ளார். திருமண பந்தத்தின் மீதும், உறவுகளின் மீதும் துளியும் நேர்மையும் மரியாதையும் இல்லாதவர்கள் எதற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
