திக் திக் நிமிடங்கள்..! 14வது மாடியில் இருந்து படாரென 6 தளங்கள் சரிந்த லிஃப்ட்.. கதறிய குழந்தைகள்… 3 மணி நேர மரண பய போராட்டம்… வைரல்கும் பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக் நிமிடங்கள்..! 14வது மாடியில் இருந்து படாரென 6 தளங்கள் சரிந்த லிஃப்ட்.. கதறிய குழந்தைகள்… 3 மணி நேர மரண பய போராட்டம்… வைரல்கும் பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

மும்பை நேரு நகர் பகுதியில் உள்ள மாஸ் மெட்ரோபோலிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் நடந்த பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு, 4 குழந்தைகள் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் லிஃப்ட் மூலம் கீழே இறங்கியுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த லிஃப்ட் 6 தளங்கள் வேகமாகக் கீழே சரிந்து வந்து நடுவழியில் சிக்கிக் கொண்டது.

மூச்சுத்திணறல் மற்றும் பயத்துடன் நால்புறமும் அலறியவாறு 14 பேரும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக லிஃப்ட்டிற்குள்ளேயே அடைபட்டுத் தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லிஃப்ட்டைத் திறந்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையாகப் பராமரிக்கப்படாத லிஃப்ட்டுகளால் தொடரும் இதுபோன்ற விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in