CRIME
“ஐயோ கொடுமையே.. காட்டில் துண்டிக்கப்பட்ட காதலியின் தலை…” காதலனுக்கு அடுத்த சில மணி நேரத்திலேயே கிடைத்த ‘ஸ்பாட்’ மரணத்தீர்ப்பு.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், 17 வயது சிறுமி ஒருவரை அவரது காதலன் கொடூரமாகக் கொலை செய்து தலையைத் துண்டித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செப்டம்பர் 30 முதல் காணாமல் போன அந்தச் சிறுமியின் உடல், ஒரு வாரத் தேடுதலுக்குப் பிறகு பியாவ்ராவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் முற்றிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அங்கே சிறுமியின் உடல் ஒரு இடத்திலும், அவளுடைய தலை துண்டிக்கப்பட்டு சுமார் 50 அடி தூரத்திற்கு அப்பாலும் கண்டெடுக்கப்பட்டது ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.
இந்தக் கொடூரக் கொலையைச் செய்ததாகக் கருதப்படும் அங்கித் மாளவியா என்ற 21 வயது இளைஞன், கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தச் சிறுமியுடன் பழகி வந்த அங்கித், சம்பவத்தன்று அவரைத் தனது மோட்டார் சைக்கிளில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று ஆரியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கொலையைச் செய்த பின்னர் தனது உறவினருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து பைக்கில் தப்பியோட முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மரணங்களின் பின்னணியில் உள்ள அசல் காரணம் என்ன என்பது குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
