CRIME
“அவள் தற்கொலைதான் செய்துகொண்டாள்…” சாக்குப்பைக்குள் இளம்பெண் சடலம்.. திருமணமான லேக்பால் சொன்ன ‘அந்த’ வாக்குமூலம்… அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது கல்லூரி மாணவியான விசாஹா, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் துறையில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், விசாஹாவிற்கும் சிவஜீத் பதாரியா என்ற வருவாய் எழுத்தருக்கும் இடையே காதல் உறவு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஏற்கனவே திருமணமான சிவஜீத்திடம் விசாஹா தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், காணாமல் போன எட்டு நாட்களுக்குப் பிறகு எட்டாவா பகுதியில் உள்ள யமுனை ஆற்றங்கரையில், சாக்குப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் விசாஹாவின் சடலம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வருவாய் எழுத்தர் சிவஜீத்தை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் விசாஹா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும், பயத்தின் காரணமாக அவரது உடலைச் சாக்குப்பையில் கட்டி ஆற்றில் வீசியதாகவும் அந்த அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளதால், போலீஸார் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்
