“ராணுவ வீரருக்கே இந்த நிலைமையா..?” சுத்தியலால் அடித்து மூக்கை துண்டித்த கொடூரக் கும்பல்.. சொந்த ஊரில் நேர்ந்த கொடூரம.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ராணுவ வீரருக்கே இந்த நிலைமையா..?” சுத்தியலால் அடித்து மூக்கை துண்டித்த கொடூரக் கும்பல்.. சொந்த ஊரில் நேர்ந்த கொடூரம.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஜெவார் பகுதியில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இந்திய ராணுவ வீரர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கின் சியாச்சின் பனிமலை முகாமில், 5வது ஜாட் பட்டாலியனில் பணியாற்றி வரும் ராக்கி தலான் என்ற ராணுவ வீரர், புதன்கிழமை இரவு ஜெவார் பகுதியிலிருந்து தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆர்&ஆர் டவுன்ஷிப் அருகே எதிர்பாராதவிதமாக மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் இவரது வாகனம் மோதியுள்ளது. இந்தச் சிறு விபத்து காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், விரைவில் பெரும் வன்முறையாக மாறியது.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த இளைஞர் ராணுவ வீரரை அவதூறாகப் பேசித் தாக்கத் தொடங்கிய நிலையில், உடனடியாக அவரது கூட்டாளிகள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அந்த மூன்று சமூக விரோதிகளும் சேர்ந்து ராணுவ வீரர் ராக்கி தலானைச் சூழ்ந்துகொண்டு கூர்மையான இரும்புப் பொருளால் அவரது முகத்தில் நேராகத் தாக்கியுள்ளனர். இதில் அவரது மூக்கின் முன்பகுதி துண்டிக்கப்பட்டு, ரத்தம் கொட்டியுள்ளது. அதோடு நிறுத்தாமல், அந்த குண்டர்கள் சுத்தியலால் அவரது தொடையிலும் பயங்கரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

Advertisement

இரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த அந்த வீரரை அவரது குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எல்லையில் நாட்டைப் பாதுகாக்கும் ஒரு வீரருக்கு எதிராக உள்ளூரிலேயே இழைக்கப்பட்ட இந்தக் கொடூரச் செயல், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெவார் காவல் நிலையப் பொறுப்பாளர் கூறுகையில், குடும்பத்தினரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்டு, வீரருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருவதால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in