LATEST NEWS
“குட் டச், பேட் டச்” குழந்தைக்கு பாடம் எடுத்த ஆசிரியை… இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ.. குவியும் பாராட்டுக்கள்..!!
அரியானா மாநிலம் யமுனா நகரில் உள்ள லே டாஃபோடில்ஸ் ப்ளேஸ்கூல் என்ற தனியார் பள்ளி, குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வு பாடம் நடத்திய காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
https://www.instagram.com/reel/DeL0zByzYCL/?utm_source=ig_web_button_share_sheet
சமூக வலைதளங்களில் வெளியான அந்த காணொளியில், ஒரு பெண் குழந்தை தனது கைகளில் ‘நல்ல தொடுதல்’ மற்றும் ‘தவறான தொடுதல்’ என எழுதப்பட்ட இரு வேறு பதாகைகளை வைத்துள்ளது. ஆசிரியை ஒருவர் அக்குழந்தையின் கன்னம், தலை மற்றும் கைகளைத் தொடும்போது, அது ‘நல்ல தொடுதல்’ என்ற பதாகையை உயர்த்திக் காட்டுகிறது. ஆனால், குழந்தையின் மார்பு, இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி மற்றும் பின்புறம் ஆகிய உடல் பாகங்களைத் தொடும்போது, தான் அசெளகரியத்தை உணர்வதாகக் கூறி ‘தவறான தொடுதல்’ என்ற பதாகையை அந்தப் பெண் குழந்தை உயர்த்துகிறது.
இந்தப் பள்ளியின் முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இக்காணொளி, இணையவாசிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குழந்தைகளின் சம்மதம் மற்றும் அவர்களின் உடல்ரீதியான அசெளகரியங்களை இவ்வளவு எளிமையாகக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
