பிக் பாஸ் வீட்டில் அரங்கேறிய செம ட்விஸ்ட்… பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்..! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்..!! – cinefeeds
Connect with us

CINEMA

பிக் பாஸ் வீட்டில் அரங்கேறிய செம ட்விஸ்ட்… பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்..! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்..!!

Published

on

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் வைரத்தை மையமாகக் கொண்டு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த சுவாரஸ்யமான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் முனியம்மா எதிர்க்கட்சி தலைவராகச் செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், இந்த வாரம் அன்சர் வீட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டு நடுவே வைக்கப்பட்டுள்ள வைரத்தை கைப்பற்றும் புதிய டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின் தொடக்கமாக, போட்டியாளர் டிடிஎஃப் வாசன் அந்த வைரத்தை ரகசியமாக எடுத்து பதுக்கி வைக்கும் செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

இதற்காக அவர் வீட்டின் குளியலறையை ஒரு ரகசிய இடமாகத் தேர்வு செய்து வைரத்தை மறைத்து வைத்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. மறுபுறம் போட்டியாளர்கள் டான்ஸ் டாஸ்க்கில் மும்முரமாக ஆடிக்கொண்டிருக்க, இந்த இடைவெளியை பயன்படுத்தி டிடிஎஃப் வாசன் இந்த திருட்டுத்தனமான வேலையைச் செய்துள்ளார். இந்த புதிய டாஸ்க் மற்றும் அதன் திருப்பங்களை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in