ஆத்தாடி..! அந்த செய்தியை கேட்டதுமே “ஷாக் அடிச்சிட்டு”.. இந்தியாவிலேயே எந்தவிரு மாநிலமும் இப்படி கிடையாது.. CPM சண்முகம் பரபரப்பு பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆத்தாடி..! அந்த செய்தியை கேட்டதுமே “ஷாக் அடிச்சிட்டு”.. இந்தியாவிலேயே எந்தவிரு மாநிலமும் இப்படி கிடையாது.. CPM சண்முகம் பரபரப்பு பேட்டி..!!

Published

on

தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிகபட்ச விலைக்குக் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்துப் பேசிய அவர், “ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ‘ஷாக் அடித்தது’ போல் ஆகிவிட்டது” என்று காரசாரமாக விமர்சித்துள்ளார். இந்தியாவிலேயே இதுவரை எந்தவொரு மாநிலமும் இந்த அளவிற்கு மிக மோசமான ஒரு கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ததாகத் தாம் கேள்விப்பட்டது கூட இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

மின் பற்றாக்குறையைக் காரணம் காட்டித் தனியார் நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டுவதை மின்சார வாரியம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல், வெளிப்படையான முறையில் நியாயமான விலையில் மட்டுமே மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in