LATEST NEWS
டிரம்ப் சார்..! “உங்க வாய்க்கொழுப்புதான் உங்களுக்கு முதல் எதிரி” உலகத்திற்கே நீங்கள்தான் தலைவனா..? டிரம்பை கிழித்து தொங்கவிட்ட சிபிஎம் சண்முகம்..!!
உலகிற்குத் தான் மட்டும்தான் ஒரே தலைவன் என்ற அகம்பாவத்திலும் மமதையிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருவதாக சிபிஎம் தலைவர் சண்முகம் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். கம்யூனிசத்தை அமெரிக்காவிலும் உலக அளவிலும் முற்றிலுமாக ஒழித்தே தீருவேன் என்று டிரம்ப் கொக்கரிப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது என்று சண்முகம் தனது கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வரலாற்றில் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் கதைகள் தான் முடிந்திருக்கிறதே தவிர, கம்யூனிசம் எப்போதும் வீழ்ந்ததில்லை என்று சண்முகம் குறிப்பிட்டுள்ளார். உலகில் எங்கு சுரண்டலும் ஒடுக்குமுறையும் இருக்கிறதோ, அங்கெல்லாம் கம்யூனிசமும் அதன் சித்தாந்தமும் தொடர்ந்து நீடிக்கும். அதனை உலகத்தில் எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியாலும், எவராலும் எளிதில் அழித்துவிட முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
உலக வரலாற்றை சரியாகப் படித்துத் தெரிந்துகொள்ளுமாறு மிஸ்டர் டிரம்பிற்கு சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், உலக நாடுகளின் இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், டிரம்பின் தற்போதைய “வாய்க்கொழுப்புதான் அவருக்கு முதல் எதிரியாக” முடியும் என்றும் மிக ஆக்ரோஷமான வார்த்தைகளால் தனது நேரடிப் பதிலடியை பதிவு செய்துள்ளார்
