CRIME
“நள்ளிரவில் வா உல்லாசமாக இருக்கலாம்..!” ஆசையாக வந்த கள்ளக்காதலன்.. கதவை மூடி கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஆகாஷ் என்ற இளைஞர் நள்ளிரவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மூட்டையில் கட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷை நள்ளிரவில் உல்லாசமாக இருக்க வரவழைத்து, மின்சாரக் கம்பியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அவரது காதலி பூனம் தேவி மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் குப்தா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரக் கம்பி மற்றும் உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட பொலிரோ வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய பூனம் தேவியின் சகோதரர் அனுஜ் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர் இந்த வழக்கின் பிற பின்னணிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
