“அடப்பாவமே.. எம்.எட் படிக்க கேட்டது ஒரு குற்றமா..?” சொந்த அக்கா என்றும் பாராமல் தம்பி செய்த வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே.. எம்.எட் படிக்க கேட்டது ஒரு குற்றமா..?” சொந்த அக்கா என்றும் பாராமல் தம்பி செய்த வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூரில், சொந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடனான காதல் விவகாரம் காரணமாக, பஞ்சாயத்து உதவியாளராகப் பணியாற்றி வந்த கோமல் என்ற இளம் பெண் அவரது தம்பியாலேயே படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோமலின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததால் அவர்களுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில், கோமல் மேற்கொண்டு எம்.எட் படிக்க விராடியுள்ளார். ஆனால், அவரது காதல் விவகாரத்தைக் காரணம் காட்டி குடும்பத்தினர் அதற்குச் சம்மதிக்க மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக வீட்டில் ஏற்பட்ட கடுமையான சண்டையின் போது, ஆத்திரமடைந்த கோமலின் தம்பி ஆஷிஷ், தனது அக்கா கோமலின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அக்கா என்றும் பாராமல் உயிரைப் பறித்த ஆஷிஷ், பின்னர் தானே காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். கௌரவக் கொலைக் கோணத்தில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in