CRIME
“சினிமாவுக்குப் போகலாம் வாங்க…” என 2 மகன்களை அழைத்து சென்ற தந்தை.. ரயில் முன் குதித்த கொடூரம்.. பார்க்கிங்கில் நின்ற காரின் கதவை உடைத்த போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டம் பிப்பாரியா பகுதியில், அஜய் தாக்கர் என்ற வருவாய்த்துறை அதிகாரி ரயில் முன்பாக குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த சில மணி நேரங்களில், ரயில் நிலைய பார்க்கிங்கில் பூட்டப்பட்ட நிலையில் நின்ற அவரது காரில் இருந்து சிவம் மற்றும் சமர்த் என்ற அவரது இரண்டு மகன்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. தனது இரு மகன்களையும் திரைப்படம் காட்ட அழைத்துச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கூட்டிச் சென்ற அஜய் தாக்கர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது. அஜய் தாக்கர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் உண்மையான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
