CRIME
“அவனோடு ஏன் பேசினாய்..?” நள்ளிரவில் வெடித்த சண்டை.. கத்தியை எடுத்த 20 வயது மூத்த கணவன்.. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தம்பி பார்த்த கொடூர காட்சி.. கத்தி கலங்க வைக்கும் சம்பவம்..!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு கடற்கரை அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியையும், 4 வயது மகனையும் லாரி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலப்பாட்டைச் சேர்ந்த 44 வயதான லாரி ஓட்டுநர் விஜேஷுக்கும், 24 வயதான விஸ்மயாவுக்கும் இடையே சுமார் 20 வயது வித்தியாசம் இருந்ததால், திருமணமான தொடக்கத்திலிருந்தே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் விஸ்மயா தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில், தம்பதியரிடையே விவாகரத்து முடிவெடுக்கும் அளவிற்குப் பிரச்சினைகள் நீடித்து வந்துள்ளன.
இதற்கிடையே, விஸ்மயாவுக்குத் தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஓர் ஆம்புலன்ஸ் ஓட்டுநருடன் ஏற்பட்ட நட்பு, விஜேஷுக்கு அவர் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் பேரில் காவல் நிலையத்திற்குச் சென்று பேசிவிட்டுத் திரும்பிய தம்பதியர், அன்று இரவு விஸ்மயாவின் தாய் வீட்டில் தங்கியுள்ளனர். நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தகராறில், விஜேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஸ்மயாவையும், அவர்களது 4 வயது மகன் தக்ஷையும் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்தார். விஸ்மயாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரர் கதவை உடைத்துப் பார்த்தபோது, விஸ்மயா இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்த பிறகு, விஜேஷ் தானும் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலப்பாடு காவல் துறையினர், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஜேஷை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
