LATEST NEWS
“அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள், தம்பிக்கு தரமாட்டீங்களா..?” அதிமுகவில் இணையும் தனுஷ்.. தவெகவிற்கு செக் வைக்கும் EPS..!!
நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் செய்திகள் குறித்து இதுவரை நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் அரசியலுக்குள் களமிறங்கினால், அது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும், தவெகவின் குறிப்பிட்ட அளவு ஆதரவாளர்களை விஜய் இழக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும், “அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள், இந்த தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கமாட்டீர்களா?” என்ற கோஷத்தை தனுஷின் தரப்பினர் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெடுக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
