“கூட்டத்திற்குள் புகுந்த அரிவாள்..” காட்டுப் பகுதிக்குள் உயிரைக் கையில் பிடித்து ஓடிய ரவுடி.. விடாமல் துரத்திச் சரித்த மர்மக் கும்பல்.. சிவகங்கையில் பரபரப்பு! – cinefeeds
Connect with us

CRIME

“கூட்டத்திற்குள் புகுந்த அரிவாள்..” காட்டுப் பகுதிக்குள் உயிரைக் கையில் பிடித்து ஓடிய ரவுடி.. விடாமல் துரத்திச் சரித்த மர்மக் கும்பல்.. சிவகங்கையில் பரபரப்பு!

Published

on

சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞரான மதன், ‘சுள்ளான் மதன்’ என்ற பெயரில் அறியப்பட்டு வந்தார். இவர் மீது 14-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லங்குடி பகுதியில் அண்ணன், தம்பியான ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கிலும் இவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட மதன், சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்திருந்தார்.

இந்நிலையில், அக்டோபர் 18 ஆம் தேதி ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண்பதற்காக மதன் சென்றுள்ளார். அவர் அங்கு நின்றுகொண்டிருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க மதன் அருகில் இருந்த கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியுள்ளார். எனினும், அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

Advertisement

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மஞ்சுவிரட்டு பகுதியில் நடந்த இந்த பயங்கரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்துத் தகவலறிந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மதனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது பழிக்குப் பழியாக அரங்கேறியதா என்ற கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in