CRIME
“அங்கிருந்து வண்டியை எடு பயங்கரவாதியே.. இல்ல கொளுத்திடுவோம்..!” 35 பயணிகளுடன் சென்ற பேருந்தை கொடூரமாக தாக்கிய கும்பல்.. நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் நீலோகேரியில் உள்ள ஒரு உணவக வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில், டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் வக்கார் சௌத்ரி உணவகத்தில் வண்டியை நிறுத்தியபோது, அங்கிருந்த சிலர் ஜம்மு காஷ்மீர் பதிவு எண் கொண்ட பேருந்தைப் பார்த்துக் கத்தி, அவரை ‘பயணவாதி’ என்று சாடியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பேருந்தின் நம்பர் பிளேட்டுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கி, ஓட்டுநரையும் ஒரு பயணியையும் தாக்கிய அந்த நபர்கள், வாகனத்திற்குத் தீ வைத்துவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகம் இந்த விவகாரத்தை ஹரியானா அரசிடம் கொண்டு சென்றதை அடுத்து, சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உறுதியளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மோஹித் மற்றும் சாவன் என்ற இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோதல் இரு தரப்பினரும் மதுபோதையில் இருந்தபோது வாகன நிறுத்துமிடம் மற்றும் வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு என்றும், இதற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்றும் ஹரியானா போலீஸார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
