“அடிப்பாவி.. போலீஸ் காக்கி சீருடைக்குள் ‘லேடி டான்’.. புதிய காதலனுக்காக பழைய காதலனுக்கு கொடூர ஸ்கெட்ச்.. பெண் SI புஷ்பாவின் பயங்கர திட்டம்.. கதி கலங்க வைக்குப் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடிப்பாவி.. போலீஸ் காக்கி சீருடைக்குள் ‘லேடி டான்’.. புதிய காதலனுக்காக பழைய காதலனுக்கு கொடூர ஸ்கெட்ச்.. பெண் SI புஷ்பாவின் பயங்கர திட்டம்.. கதி கலங்க வைக்குப் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் நாலந்தாவில் மதுவிலக்குத் துறை காவலர் அஜித் குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா குமாரி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கள்ளச்சாராயக் கடத்தல்காரர்கள் அஜித்தை சுட்டுக் கொன்றதாகக் கூறி புஷ்பா ஜோடித்த பொய்க்கதை அம்பலமாகியுள்ளது. புஷ்பா தனது புதிய ஊர்க்காவல் படை காதலனுடன் இணைந்து, தனது முன்னாள் காதலனான காவலர் அஜித்தை திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொடூரக் கொலையை மறைக்க, கடத்தல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் நாடகமாடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் நிழலில் இருந்துகொண்டு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா, சுமார் 10 தனியார் மெய்க்காப்பாளர்கள் மற்றும் குண்டர்களைக் கொண்ட ஒரு முழுமையான சட்டவிரோத சிண்டிகேட்டை நடத்தி வந்துள்ளார். இந்த கும்பலுக்கு அவர் சட்டவிரோத காக்கி சீருடைகளையும், உரிமம் இல்லாத துப்பாக்கிகளையும் வழங்கி, தனது சொந்த அதிரடிப் படை போலப் பயன்படுத்தியுள்ளார். மதுபானக் கடத்தல்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோத மாமூல் வசூல், போலி சோதனைகள் மற்றும் கோடிக்கணக்கான கறுப்புப் பணப் புழக்கம் ஆகியவற்றின் மூலம், ராஜ்கிர் பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிரம்மாண்ட ரிசார்ட் கட்ட புஷ்பா திட்டமிட்டிருந்ததாக அவரது முன்னாள் கூட்டாளி ஒருவர் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement

பாலாபூர் மற்றும் ஹில்சா பகுதிகளில் கள்ளச்சாராய மாஃபியாக்களைத் துரத்துவதாகக் கூறி, அரசு துப்பாக்கிகள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி புஷ்பாவின் ஆட்கள் பலமுறை கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளனர். மதுவிலக்குத் துறையில் இருந்தபோது, கடத்தப்படும் மதுபானங்களை முதலில் பறிமுதல் செய்துவிட்டு, பின்னர் கடத்தல்காரர்களிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசி வழக்குகளை முடித்து வைப்பதை புஷ்பா வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை மதுபானம் ஏற்றி வந்த வாகனத்தை விடுவிக்க 20 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாகவும், மேலும் மது அருந்தியதாகக் பிடிபடும் சாதாரண மக்களை வாகனங்களில் கடத்திச் சென்று, அவர்களது குடும்பத்தினரிடம் தலா 3,000 முதல் 3,500 ரூபாய் வரை மிரட்டிப் பறித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரணை முகமைகள் சரியான திசையில் கொண்டு சென்றால், புஷ்பா குமாரி சேர்த்துள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு விவரங்கள் முழுமையாக வெளிவரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in