சார் நாங்க பாவம்.. “Maths Exam இருக்கு விடுமுறை விடுங்க” கலெக்டருக்கு மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்… இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு கலக்கிய ஆட்சியர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சார் நாங்க பாவம்.. “Maths Exam இருக்கு விடுமுறை விடுங்க” கலெக்டருக்கு மாணவர்கள் அனுப்பிய மெசேஜ்… இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு கலக்கிய ஆட்சியர்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குத் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். “தயவு செய்து விடுமுறை விடுங்கள் சார்” என்று மாணவர்கள் அனுப்பிய இந்த உருக்கமான மற்றும் சுவாரசியமான மெசேஜ்களை, மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் அனுப்பியுள்ள மெசேஜ்களில், கன்னியாகுமரியில் மழை பெய்வதாகவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சீருடை நனைந்து பள்ளிக்குச் செல்ல கடினமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “சார் நாங்கள் பாவம், மின்னல் வேறு அடிக்கிறது, நாளைக்கு மேக்ஸ் எக்ஸாம் இருக்கிறது, தயவு செய்து லீவ் கொடுங்கள்” எனப் பல்வேறு காரணங்களைக் கூறி மாணவர்கள் தங்களது குமுறல்களை இன்ஸ்டாகிராமில் கொட்டியுள்ளனர்.

Advertisement

பள்ளி மாணவர்களின் இந்த மெசேஜ்களை மாவட்ட ஆட்சியர் “Rainy days !! #paridhabangal !” என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த ரீல்ஸ் தற்பொழுது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பயங்கர வைரலாகப் பரவி வருகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த கலகலப்பான பதிவு ஒருபுறம் ரசிக்கப்பட்டாலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in