LATEST NEWS
BREAKING : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு நீதிமன்றக் காவல்… காலையிலேயே பரபரப்பு..!!
₹100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி முதல் வகுப்பு அறையில் அடைக்கவும், தகுந்த உணவுகளை வழங்கவும் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மறுபுறம், இந்த வழக்கு விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். அன்பில் மகேஸைக் கைது செய்யும்போது முறையான சட்ட நடைமுறைகள் எதையும் காவல்துறை பின்பற்றவில்லை என்றும், ஒரு முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஆளுநரிடம் முன்கூட்டியே எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
