LATEST NEWS
“தனுஷ் புதிய கட்சி ஆரம்பிப்பது உறுதி..” நண்பர்கள் சொன்ன அந்த ரகசியம்… உண்மையை உடைத்த கே.டி.ராஜேந்திர பாலாஜி..!!
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் பேட்டியில் பேசிய அவர், தனுஷ் பாஜகவில் இணைகிறாரா என்பது எனக்குத் தெரியாது எனவும், ஆனால் அவர் தனியாகப் புதிய கட்சி தொடங்கவுள்ளார் என்பது அவரது நண்பர்கள் மூலம் எனக்குத் தெரியவந்தது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, தனுஷ் அதிமுகவிற்கு வந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனுஷின் அரசியல் வருகை குறித்து அவர் அடுத்தடுத்து இவ்வாறு பேசி வருவது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
