CRIME
“விட்ருங்க சித்தப்பா” 1 இல்ல 2 இல்ல 40 முறை… 16 வயது சிறுமியை வெட்டிய கொடூரம்.. நடந்தது என்ன..? திடுக்கிடும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் டீட்வானா மாவட்டத்தில், 16 வயது சிறுமியை அவரது சொந்தச் சித்தப்பாவே கோடரியால் 40 முறை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. டீட்வானாவின் கல்யாண்புரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த அதிர்ச்சித் தரும் கொலை நடந்துள்ளது.
கொலையாளி ஓம்பிரகாஷ் (40) தனது உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு 16 வயது சிறுமி அக்சிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அச்சமயம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சாதாரண வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் தான் கொண்டு வந்திருந்த கோடரியால் சிறுமியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற ஓடிவந்த பாட்டி துளசா தேவியையும் அந்த நபர் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டு தப்பியோடிய ஓம்பிரகாஷ், அருகில் இருந்த விவசாய நிலங்களுக்குச் சென்று பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு மயங்கிக் கிடந்த அவரை மீட்ட போலீஸார், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துக் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த பாட்டி குசாமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இந்தத் துயரம் நடந்துள்ளது. எதற்காக இந்த வாக்குவாதம் ஏற்பட்டது மற்றும் சித்தப்பா இந்தக் கொடூரக் கொலையைச் செய்ததற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து, குற்றவாளி குணமடைந்து அவரிடம் விசாரணை நடத்திய பிறகே முழுமையாகத் தெரியவரும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
