“உன் முகம் கேவலமா இருக்கு…” விளையாட்டாக சொன்ன ஒரு வார்த்தை.. தூங்கிக்கொண்டிருந்த போது விழுந்த கோடரி வெட்டு.. மார்க்கெட்டில் கதறிய தொழிலாளி… தூத்துக்குடியில் அதிர்ச்சி! – cinefeeds
Connect with us

CRIME

“உன் முகம் கேவலமா இருக்கு…” விளையாட்டாக சொன்ன ஒரு வார்த்தை.. தூங்கிக்கொண்டிருந்த போது விழுந்த கோடரி வெட்டு.. மார்க்கெட்டில் கதறிய தொழிலாளி… தூத்துக்குடியில் அதிர்ச்சி!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தினசரி சந்தையில், உருவக் கேலி செய்த சக சுமை தூக்கும் தொழிலாளரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய காளிராஜ் மற்றும் அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய சின்னத்துரை ஆகிய இருவரும் திட்டங்குளம் காமராஜர் வணிக வளாகத்தில் உள்ள தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். காளிராஜ், சின்னத்துரையைப் பார்க்கும் போதெல்லாம் “உன் முகம் கேவலமாக இருக்கிறது, பார்க்க முடியவில்லை” என அடிக்கடி உருவக் கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை வேலைக்கு வந்த இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிராஜ், சின்னத்துரையை கேலி செய்ததோடு மற்றவர்கள் முன்னிலையில் கீழே தள்ளித் தாக்கியுள்ளார். பொது இடத்தில் தன்னைத் தாக்கியதை அசிங்கமாகவும் பெரும் அவமானமாகவும் கருதிய சின்னத்துரை, காளிராஜ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலை தினசரி சந்தையில் உள்ள ஒரு காய்கறிக் கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சின்னத்துரை தான் மறைத்து வைத்திருந்த கோடரியால் காளிராஜை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார்.

Advertisement

கொலை செய்த பின்னர் சின்னத்துரை கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் சென்று நேராகச் சரணடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், காளிராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட காளிராஜுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. விளையாட்டாகத் தொடங்கிய உருவக் கேலி கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in