CRIME
“காதலுக்குக் கண் இல்லை ஓகே… ஆனா இப்படியா..?” 3 குழந்தைகளுக்குத் தந்தை… 5 குழந்தைகளுக்குத் தாய்.. ரகசியக் காதலுக்காக ஜோடியாக எடுத்த விசித்திர முடிவு.. ஊரையே அதிரவைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், 3 குழந்தைகளை பெற்ற தந்தையும், 5 குழந்தைகளைப் பெற்ற தாயும் தங்களது காதல் விவகாரத்திற்காக வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த விசித்திரச் சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குப்தா என்ற 3 குழந்தைகளின் தந்தை விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான நீலம் குமாரி என்ற பெண்ணுடன் இவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நீலம் குமாரியின் இந்த விசித்திரக் காதல் கதை, ஊர்மக்களிடையே ஏற்கனவே அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்துள்ளது.
காதல் போதையில் கண்மூடித்தனமாக மாறிய இந்த ஜோடி, கடந்த அக்டோபர் 8ஆம் தேதியே வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. இவர்கள் எடுத்த இந்த விபரீத முடிவால், இரண்டு குடும்பங்களையும் சேர்ந்த மொத்தம் 8 குழந்தைகளின் எதிர்காலம் தற்போது நட்டாற்றில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நீலம் குமாரி தனது வீட்டில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு அமித் குப்தாவுடன் ஓடிவிட்டதாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் குடும்ப அவமானத்திற்குப் பயந்து இச்சம்பவம் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் மறைத்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காணாமல் போய் 15 நாட்கள் கடந்த நிலையில், வேறு வழியின்றி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகே இந்த விசித்திரக் காதல் விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. இப்புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், வீட்டை விட்டு ஓடிய இருவரையும் விரைவில் கண்டுபிடித்துத் தருவதாக உறுதி அளித்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
