“ராங் நம்பரில் வந்த காமுகன்.. ” கடன் கொடுத்த பாவி செய்த கொடூரம்.. கிணற்றில் வீசப்பட்ட அமைந்தகரை பெண்மணி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!! – cinefeeds
Connect with us

CRIME

“ராங் நம்பரில் வந்த காமுகன்.. ” கடன் கொடுத்த பாவி செய்த கொடூரம்.. கிணற்றில் வீசப்பட்ட அமைந்தகரை பெண்மணி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே விவசாயக் கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், கடன் கொடுத்த ரூ.50,000 பாக்கிக்காக அவரைக் கொலை செய்த நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேல்மருவத்தூர் சிறுநாகலூர் பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யட்டுக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியதோடு, துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகள் அமைத்துத் தீவிர விசாரணையில் இறங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (41) என்பது தெரியவந்தது. அவரது கைப்பேசி எண்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரவேல் (எ) ஜானி அன்புதாஸ் (45) என்ற நபர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த மதுரவேல், தவறான எண்கள் மூலம் பெண்களைத் தொடர்புகொண்டு, குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஏழைப் பெண்களைக் குறிவைத்து மோசடி செய்து வந்துள்ளார். கடனைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதிக வட்டி கேட்டு மிரட்டுவதுடன், பெண்களை உல்லாசத்திற்கு அழைத்துப் பலவந்தப்படுத்துவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதேபோல் மணிமேகலையும் தனது குடும்பச் செலவுக்காக மதுரவேலிடம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் 1 லட்ச ரூபாயைத் திருப்பிச் செலுத்திய மணிமேகலை, மீதமிருந்த ரூ.50,000 பணத்தைச் செலுத்தச் சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். அந்தப் பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மதுரவேல், புதிய எண் மூலம் மணிமேகலையைத் தொடர்பு கொண்டு மீண்டும் கடன் தருவதாகக் கூறி மேல்மருவத்தூருக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த மணிமேகலையைத் தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துக் கொண்டதோடு, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்து சடலத்தைக் கிணற்றில் வீசியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மதுரவேலிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in