CRIME
“ஊர் முன்னாடி கைகூப்பி மன்னிப்பு கேளு..” உயிருக்குப் போராடும் நிலையிலும் கணவரை அதிர வைத்த மனைவி.. கிணற்றுக்குள் நடந்த பரபரப்பு சமரசம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த மனைவி கிணற்றில் குதித்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வீட்டில் கதவைப் பூட்டுவது தொடர்பான பழக்கத்தால் இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், கோபமடைந்த மனைவி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார். பதறிப்போன கணவர் அவரை மீட்கக் கயிற்றை வீசியபோதும், அவர் மேலே வர மறுத்து, “ஊர் மக்கள் முன்னிலையில் கணவர் கைகூப்பி மன்னிப்பு கேட்டால் மட்டுமே கிணற்றை விட்டு வெளியே வருவேன்” என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.
இந்தத் தகராறைக் கேட்டு அக்கம் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் கிணற்றைச் சுற்றி ஒன்று கூடினர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகும் மனைவி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி கணவர் ஒட்டுமொத்த கிராம மக்கள் முன்னிலையில் கைகூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். கணவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட பிறகே, அந்தப் பெண் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றிலிருந்து பத்திரமாக வெளியே வந்துள்ளார். உயிருக்குப் போராடும் நிலையிலும் கணவரைப் பழிவாங்க ஊரறிய மன்னிப்பு கேட்க வைத்த மனைவியின் இந்த அதிரடிச் செயல் சமூக வலைதளங்களில் தற்பொழுது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது
