இவளெல்லாம் மனுஷியா.? ஜிம் மாஸ்டருடன் கள்ளத்தொடர்பு… 3 வயதுக் குழந்தை கண்ணெதிரே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கையும் களவுமாக சிக்கிய மனைவி..!! – cinefeeds
Connect with us

CRIME

இவளெல்லாம் மனுஷியா.? ஜிம் மாஸ்டருடன் கள்ளத்தொடர்பு… 3 வயதுக் குழந்தை கண்ணெதிரே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கையும் களவுமாக சிக்கிய மனைவி..!!

Published

on

மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உத்திரப்பிரதேசம் காசியாபாத் பகுதியில் உள்ள வசுந்தரா பகுதியில் அரங்கேறியுள்ளது. டெல்லி அரசுப் பணியாளரான ஷசாங்க் காந்தாரியா என்பவரைக் கொல்ல அவரது மனைவியும் மூத்த கணக்காளருமான பிரியா சர்மா மற்றும் அவரது உடற்பயிற்சி பயிற்சியாளரான காதலனுடன் இணைந்து கொடூரத் திட்டம் தீட்டியுள்ளனர்.

பிரியா சர்மா கடந்த சில மாதங்களாக ஜிம்மிற்குச் சென்று வந்தபோது, உடற்பயிற்சி பயிற்சியாளருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பின் காரணமாக, தனது கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இந்தத் தகாத உறவைக் கணவர் கண்டித்ததோடு, ஜிம்மிற்குச் செல்வதையும் நிறுத்தச் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, காதலனுடன் இணைந்து கணவனைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார்.

Advertisement

கடந்த வாரம் அதிகாலை நேரத்தில், தூங்கிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையின் அருகில் வைத்து ஷசாங்க் மீது கொடூரமான முறையில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. தலை, நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 9 முதல் 12-க்கும் மேற்பட்ட பலத்த காயங்களுடன் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்களின் துரித நடவடிக்கையால் தப்பியோட முயன்ற குற்றவாளிகள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.

குடும்ப உறவுகளின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கிறது. சுயநலத்துக்காகவும் முறையற்ற உறவுகளுக்காகவும் சொந்தக் குடும்பத்தினரையே கொலை செய்யும் இதுபோன்ற குற்றங்கள் சமுதாயத்தின் சீரழிவை வெளிப்படுத்துகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in