LATEST NEWS
“தனுஷ் ஆட்டம் ஆரம்பம்..” 234 தொகுதிகளிலும் AC இலவச டியூஷன் மையங்கள்… தெறிக்கவிடும் நற்பணி இயக்கம்..!!
நடிகர் தனுஷின் நற்பணி இயக்கம் சார்பில், ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக இலவச டியூஷன் சென்டர்கள் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்களை இலக்காகக் கொண்டு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குளிரூட்டப்பட்ட இலவச டியூஷன் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதற்காக, ஒவ்வொரு டியூஷன் மையத்திலும் 3 பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், அவர்களுக்கு உதவ ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட உள்ளனர்.
இத்திட்டம் முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தத் தீவிர நடவடிக்கை, நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கான ஒரு முக்கிய முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
