LATEST NEWS
“ஜஸ்ட் மிஸ்.. மரண விளிம்பில் டிராக்டர் டிரைவர்..” காற்றில் தூக்கிய டிராக்டர்.. அடுத்த நொடியில் நடந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
கனரகப் பொருட்கள் ஏற்றப்பட்ட டிராக்டர் டிராலியைச் சாலையின் மேலே கொண்டு வருவதற்காக, ஓட்டுநர் தனது உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான முறையில் முயன்றபோது டிராக்டரின் எஞ்சினே தனியாகக் கழன்று ஓடிய திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் ஓட்டுநரின் உயிரே போயிருக்கக் கூடிய இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுநர் டிராக்டரை முன்னோக்கி நகர்த்த 1-2 முறை தனது முழு பலத்தையும் பிரயோகித்து முடுக்கியபோது, அதிக எடையின் காரணமாக டிராக்டரின் முன்பகுதி காற்றில் ஆபத்தாகத் தூக்கியுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக, டிராக்டரின் எஞ்சின் பகுதியையும் டிராலியையும் இணைக்கும் பகுதி திடீரென உடைந்து, எஞ்சின் மட்டும் தனியாகப் பிரிந்து முன்னோக்கிப் பாய்ந்தது. நல்லவேளையாக ஓட்டுநர் எஞ்சினோடு சேர்த்து முன்னோக்கிச் சென்றதால், பின்னால் இருந்த கனரக டிராலி அவர் மீது கவிழாமல் நூலிழையில் உயிர் தப்பினார். சில நிமிடங்களைச் சேமிப்பதற்காக அல்லது அலட்சியத்தின் காரணமாகப் பலர் தங்களின் விலைமதிப்பற்ற உயிரையே இப்படி ஆபத்தான சாகசங்களில் பணையம் வைப்பது ஏன் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
