கார் அருகே மயங்கிக் கிடந்த தடகள வீரர்… மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற அந்த பெண் யார்..? நீரஜ் யாதவ் மரணத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கார் அருகே மயங்கிக் கிடந்த தடகள வீரர்… மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற அந்த பெண் யார்..? நீரஜ் யாதவ் மரணத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும், ஆசிய பாரா போட்டிகளில் 3 முறை தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவருமான மாற்றுத்திறனாளி தடகள வீரர் நீரஜ் யாதவ் (வயது 42), வடகிழக்கு டெல்லியில் உள்ள மௌஜ்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தனது காரின் அருகில் பிணமாக கிடந்தது விளையாட்டு உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் எந்தவொரு தற்கொலை கடிதமோ அல்லது வீடியோ பதிவோ கிடைக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025 டிசம்பர் முதல் நீரஜ் யாதவுடன் நட்பாக பழகி வந்த பெண் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சோனிபட் சென்ற அந்த பெண் இனிமேல் தொடர்பில் இருக்க முடியாது என்று நீரஜ் யாதவிடம் கூறியதாகவும், பின்னர் இரவு நேரத்தில் மௌஜ்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காரின் அருகில் அவர் மயங்கி கிடந்ததை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே, நீரஜ் யாதவின் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது உறவினர் ஒருவர், கடுமையாக போராடி சாதனைகளை படைத்த அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்றும், அவருடன் தொடர்பில் இருந்த அந்தப் பெண் குறித்து குடும்பத்தினருக்கு எதுவும் தெரியாது என்பதால் அவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஊக்கமருந்து தடை விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என தலைமை பாரா தடகள பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in