திரையுலகில் பெருஞ்சோகம்: ‘ஸ்டார் டிரக்’ புகழ் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்.. ரசிகர்கள் கண்ணீர்..! – cinefeeds
Connect with us

CINEMA

திரையுலகில் பெருஞ்சோகம்: ‘ஸ்டார் டிரக்’ புகழ் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்.. ரசிகர்கள் கண்ணீர்..!

Published

on

‘ஸ்டார் டிரக்’ மற்றும் ‘எக்ஸ் மென்’ திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பழம்பெரும் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (86) காலமானார். அல்சைமர் மற்றும் ல்யூவி பாடி டிமென்டிசா (Alzheimer and Lewy body dementia) நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவர் இறக்கும் தருவாயில் அவரது மனைவி சன்னி ஊசெல் உடன் இருந்தார்.

வறுமை மற்றும் தந்தையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட எளிய பின்னணியில் இருந்து வந்த பேட்ரிக், தனது 18 வயதில் மேடை நாடகங்கள் மூலம் நடிப்பைத் தொடங்கினார். ‘ஸ்டார் டிரக்’ தொடரில் கேப்டன் ஜீன் லுக் பிக்கார்ட் கதாபாத்திரமும், மார்வெலின் ‘எக்ஸ் மென்’ படங்களில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரமும் இவருக்கு உலகளாவிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. கலைத்துறையில் இவரின் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக பிரிட்டன் அரசு இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இவரின் மறைவு ஹாலிவுட் திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in