“எங்களுக்காக யாருமே இல்ல” தம்பிக்காக மொத்த குடும்பமும் தற்கொலை… பூட்டிய வீட்டின் கதவை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்களுக்காக யாருமே இல்ல” தம்பிக்காக மொத்த குடும்பமும் தற்கொலை… பூட்டிய வீட்டின் கதவை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

Published

on

மும்பை விரார் மேற்கு பகுதியில் உள்ள குளோபல் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு வசித்து வந்த தீபக் மன்சுக்லால் மேத்தா, அவரது தம்பி குமார் மற்றும் தங்கை கேவ்னா ஆகிய மூவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த குமார் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவரது மருத்துவச் செலவுகளுக்குப் போதிய பணம் இல்லாததால், அக்குடும்பம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டும் உரிய நிதி கிடைக்காததால், மிகுந்த மனவேதனையுடனும் விரக்தியுடனும் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

Advertisement

சிகிச்சைக்கு வழியின்றி தவித்த அந்த மூன்று பேரும், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அழுகிய நிலையில் இருந்த மூன்று உடல்களையும் மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in