CRIME
நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!”1 இல்ல 2 இல்ல 150 முறை” மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவன்.. உடல் முழுவதும் 150 தையல்கள்.. நடந்தது என்ன..?
பீகார் மாநிலம் ஆராவில் பண்டிகையன்று, பணத் தகராறு காரணமாக மனைவியை அவரது கணவரே கத்தரிக்கோலால் 150-க்கும் மேற்பட்ட முறை குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள தையல் கடையில் பயன்படுத்தப்படும் கூர்மையான கத்தரிக்கோலால் ராக்கி குமாரி (26) என்ற பெண்ணின் முகம், கழுத்து, முதுகு மற்றும் கைகளில் அவரது கணவர் பங்கஜ் குமார் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் ‘PhonePe’ கணக்கில் இருந்த சுமார் 1.5 லட்சம் ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இந்த விபரீதத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. படுகாயமடைந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் சுமார் 3 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து, உடலில் 150 தையல்கள் போட்டு அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தற்போது அந்தப் பெண் 72 மணி நேர தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
2019-இல் திருமணமான நாள் முதலே போதைக்கு அடிமையான கணவர் பங்கஜ் குமார், தொடர்ந்து மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்ததாகப் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்துப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொடூரத் தாக்குதல் நடத்திய கணவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
