“எனக்கே தெரியாம ஓட்டியிருக்கான் சார்” நீதிபதி தந்தையின் பகீர் வாக்குமூலம்.. அவரை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கே தெரியாம ஓட்டியிருக்கான் சார்” நீதிபதி தந்தையின் பகீர் வாக்குமூலம்.. அவரை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Published

on

கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவத்தில் காரை ஓட்டிய சிறுவனின் தந்தை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தனது தந்தையைக் கைது செய்யக்கூடாது எனத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிபதியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தனக்குத் தெரியாமல் தனது மகன் காரை எடுத்துச் சென்று ஓட்டியதாக நீதிபதி அளித்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தான் உறங்கிக்கொண்டிருந்த போது, தனக்குத் தெரியாமல் தனது மகன் வீட்டின் பின்வாசல் வழியாக காரை எடுத்துச் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதாகவும், தொலைபேசி அழைப்பு வந்த பிறகே தனக்கு விபத்து குறித்துத் தெரியவந்தது என்றும் நீதிபதி தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றும், அவரைத் தற்போதைக்குக் கைது செய்யத் தேவையில்லை என்றும் கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in