LATEST NEWS
“அம்மாடி முடியல” கைதைத் தவிர்க்க நெஞ்சு வலி நாடகம்.. 5,000 கோடி மோசடி மன்னன் பிரேம்குமார் சென்னை மருத்துவமனையில் சிக்கிய பகீர் பின்னணி..!!
சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (BLM) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பிரேம்குமாரை கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஓய்வூதியதாரர்களைக் குறிவைத்து முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து தமிழ்நாடு காவல்துறையின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, காவல்துறையின் கைதைத் தவிர்ப்பதற்காகத் தனக்குக் கடுமையான நெஞ்சு வலி இருப்பதாகக் கூறி மயங்கி விழுந்து பிரேம்குமார் நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரிவான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு நெஞ்சு வலி எதுவும் இல்லை என்பதும், அவரது உடல்நிலை முற்றிலும் சீராக உள்ளது என்பதும் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கைதைத் தவிர்க்க அவர் அரங்கேற்றிய நெஞ்சு வலி நாடகம் முற்றிலுமாக அம்பலமானது. மருத்துவ ரீதியாக அவர் ஆரோக்கியமாக இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, கேரளப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் பிரேம்குமாரைக் கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
