CRIME
வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள்… 44 நிமிடங்களுக்குப் பின் நடந்த பயங்கரம்.. குளியலறையில் பிணமாகக் கிடந்த மனைவி… நடுங்க வைக்கும் பின்னணி..!!
பிரசாந்த் என்பவர் தனது மனைவி நீது மற்றும் மகனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆனால், இவருக்கும் இவரது உறவினரான சந்தீப் என்பவருக்கும் இடையே 1300 சதுர கெஜம் கொண்ட பூர்வீக நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பெரும் தகராறு இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பிரசாந்தின் வீட்டிற்குள் இரண்டு நபர்கள் நுழைந்துள்ளனர். அதில் ஒருவன் பிட்சா டெலிவரி செய்யும் பையன் போலவும், மற்றொருவன் எலக்ட்ரீஷியன் போலவும் வேடமிட்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த சரியாக 44 நிமிடங்களுக்குப் பிறகு, இருவரும் அவசரமாக வெளியேறி மாயமாய் மறைந்தனர். மதிய வேளையில் பிரசாந்த் வீட்டிற்குத் திரும்பியபோது, அங்கு வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் நிலைமையைக் கண்டு பதறிய பிரசாந்த், தனது மனைவி நீதுவைத் தேடி அலைந்துள்ளார். இறுதியாகக் குளியலறையின் கதவைத் திறந்தபோது, அவர் கண்ட காட்சி அவரது காலடியிலிருந்து நிலத்தையே நழுவச் செய்தது. அவரது மனைவி நீது அங்கே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்துள்ளார். அந்த 44 நிமிடங்களுக்குள் வீட்டின் உள்ளே அப்படி என்னதான் நடந்தது என்ற மர்மம் நீடித்தது. ஆரம்பத்தில், பூர்வீக நிலத் தகராறு காரணமாக இந்தத் துயரம் நடந்திருக்கலாம் அல்லது கொள்ளை முயற்சியில் இந்த விபரீதம் நேர்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், விசாரணையில் அந்த 44 நிமிடங்களுக்குள் அரங்கேறிய கொடூரத் திட்டம் குறித்த திடுக்கிடும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
