LATEST NEWS
“பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கு…” 6 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய 8 வயது சிறுவன்..! வகுப்பறையில் நடந்த பகீர் சம்பவம்..!!
அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் 6 வயது மாணவியை, அதே பள்ளியில் படித்து வரும் 8 வயது சிறுவன் கொடூரமாக தாக்கியுள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து நடைபெற்ற இந்த தாக்குதலில் சிறுமி ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, படுகாயமடைந்த சிறுமியை மீட்ட ஆசிரியர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை வகுப்பறையில் சக சிறுவன் கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
