17 வயது சிறுவனின் அராஜக வேகம்.. பைக் மோதி தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுவன்.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

17 வயது சிறுவனின் அராஜக வேகம்.. பைக் மோதி தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுவன்.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் பத்ராவதி நகரின் நாகசேன் நகர் பகுதியில், பயிற்சி வகுப்பு முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாலையில் சிறுவன் சைக்கிளில் கடக்க முயன்றபோது, 17 வயது சிறுவன் ஒருவன் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது பலத்தமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் அதிர்ஷ்டவசமாக அந்த 8 வயது சிறுவன் உயிர் தப்பினான்.

இந்த விபத்தைக் நேரில் கண்ட அப்பகுதி பொதுமக்கள், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை உடனடியாக மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பத்ராவதி போலீசார், காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மைனர் சிறுவன் தாறுமாறாக வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in