“என்னால இங்க இருக்க முடியலப்பா..” தந்தைக்கு வந்த கடைசி போன் கால்.. விடுதியில் 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த அதிரடி முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னால இங்க இருக்க முடியலப்பா..” தந்தைக்கு வந்த கடைசி போன் கால்.. விடுதியில் 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த அதிரடி முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம் வர்கல் மண்டல பிசி விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் ராம் சரண், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் அடித்த மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மார்குக் மண்டலம் போத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த மாணவன், சம்பவத்திற்கு முன்னதாக தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்து, பள்ளியில் ஆசிரியர் தன்னை அடித்ததாகவும், இதனால் தன்னால் விடுதியில் தொடர்ந்து தங்கிப் படிக்க முடியாது என்றும் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இந்த நிலையில், விடுதியில் மற்ற மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி ராம் சரண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் அவனது உடலை மீட்டு கஜ்வெல் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியர் அடித்ததால் ஒரு பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட இந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in